யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கரும்புலிகள் தினம் நினைவுகூரப்பட்டது

By tamil nation on 06/07/2017

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கரும்புலிகள் தினம் நினைவுகூரப்பட்டது. முதலாவது கரும்புலி வீரன் கப்டன் மில்லர் நெல்லியடி இராணுவ முகாம் மீது நடாத்திய முதல் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்ட நாளை தேசியத் தலைவர் பிரபாகரன் கரும்புலிகள் நாளாக அறிவித்திருந்தார். அன்றிலிருந்து ஜூலை 5ஆம் நாள் கரும்புலிகள் தினம் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுவரும் கரும்புலிகள் தினம், ஈழத்தில் அச்சுறுத்தல் காரணமாக சில இடங்களில் மாத்திரமே இரகசியமாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றையதினம் பல்கலைக்கழக மாணவர்கள் கரும்புலிகள் பொதுச்சின்னத்திற்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்துவது போன்று வடிவமைக்கப்பட்ட படமொன்றினை வைத்து மலர்தூவியும் சுடரேற்றியும் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

Discussion